திமுக நிர்வாகிகள் விலை போய்விட்டார்கள்-ஸ்டாலின் அதிர்ச்சி..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிமுகவிடம் திமுக நிர்வாகிகள் விலை போயிருக்கிறார்கள் என்பதை ஆய்வு குழு உறுதி செய்திருப்பது அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாம்.

தமிழகம் முழுவதும் கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டு வந்தார் ஸ்டாலின். அதன் அடிப்படையில் அறிவாலயத்திலேயே தொண்டர்களைத் தனியாக சந்தித்துப் பேசினார்.

‘இதன் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை பாயும்’ எனப் பேசி வருகின்றனர் தி.மு.கவினர். ஆனால், அறிவாலயத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

‘தங்கள் மீது நடவடிக்கை பாயும்’ என்ற அச்சத்தில், ஏராளமான மொட்டைக் கடிதங்களை மாவட்ட நிர்வாகிகள் அனுப்பியுள்ளனர். இந்தப் புகார் கடிதங்களைப் புறம் தள்ளாமல், அங்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வில் கிடைத்த அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மேல்மட்டம் முதல் கீழ்மட்ட நிர்வாகிகள் வரையில், ஆளும்கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். அ.தி.மு.கவின் ஸ்லீப்பர் செல்களாக அவர்கள் இருப்பதுதான் கொடுமை.

செயல் தலைவர் ஸ்டாலினை விமர்சித்து, சி.வி.சண்முகம் கடுமையாகப் பேசினார். இதற்கு மாவட்ட செயலாளர் பொன்முடி தரப்பில் இருந்து பெரிதாக எந்த எதிர்ப்பும் வரவில்லை.

அதேபோல், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஓர் இடத்தில்கூட தி.மு.கவினர் மனுத்தாக்கல் செய்யவில்லை. கொங்கணாபுரம், கச்சப்பள்ளி, சடையம்பாளையம், எடப்பாடி தாலுகா ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை, கூட்டுறவு கடன் சங்கம், கைத்தறி, மீனவர் ஆகிய சங்கங்களுக்கு நடந்த தேர்தலில், அ.தி.மு.கவினரே மனுத்தாக்கல் செய்தனர். இதனால், எந்தவிதப் போட்டியும் ஏற்படவில்லை.

அங்கு மாவட்ட செயலாளராக சிவலிங்கம் இருக்கிறார். அவரும் இதைப் பற்றிக் கேள்வி எழுப்பவில்லை. எடப்பாடி பழனிசாமி தொகுதியிலேயே, தி.மு.கவினர் பின்வாங்குகின்றனர் என்றால், என்ன நடக்கிறது என்ற அதிர்ச்சியில் இருக்கிறார் ஸ்டாலின்.

இப்படியொரு இணக்கமான கூட்டணியை கருணாநிதி-ஜெயலலிதா அரசியல் செய்த காலத்தில் யாரும் பார்த்திருக்க முடியாது. அப்படி நெருக்கமாக இருப்பவர்களின் பதவிகளும் தப்பியதில்லை. ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால், கிடைத்த வரையில் லாபம் என்ற மனநிலையில் திமுக நிர்வாகிகள் சிலர் செயல்படுகின்றனராம். இப்படியே போனால், லோச்பா தேர்தலிலும் திமுக படுதோல்வியை சந்திக்க வேண்டியதுதானாம்.

Leave a Response