ஈரோடு மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை எல்லை முற்றுகை போராட்டம்..!

நாளை நடைபெறும் எல்லை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க போவதாக ஈரோடு மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சுஜூவாடியில் நாளை எல்லை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாளை நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் பாண்டியாறு மேயாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஈரோடு வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேபோல் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் திறக்கப்பட்டதற்கும் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, கோவையில், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறி விலை தற்போது குறைந்து உள்ளது. குறிப்பாக கிலோ 60 வரை விற்பனையான கத்திரிக்காய், தற்போது 20 ரூபாய் என குறைந்து உள்ளது. இதேபோல் சின்ன வெங்காயம் 30 ரூபாயும், பல்லாரி 25 ரூபாய் என விலை குறைந்து உள்ளது. பீன்ஸ், கேரட் விளையும் 20 ரூபாய்க்கு குறைந்து உள்ளது. விலை குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் வியாபாரிகள் கவலையடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response