சின்னத்திரை இயக்குனர் சினிமா இயக்குனர் ஆனார்:இனிதே துவங்கியது “செயலி”

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு உள்ளிட்ட பல ரியாலிட்டி காமெடி ஷோக்களை இயக்கியவர் ராஜ்குமார். தற்போது சினிமா இயக்குனர் ஆகியிருக்கிறார். முதன் முறையாக செயலி என்ற காமெடி படத்தை இயக்குகிறார். இதனை ஓசனார் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எல்.வி.முத்துகணேஷ் இசை அமைக்கிறார், பாடல்களை பா.விஜய் எழுதுகிறார்.மொபைலில் ஆப் எனப்படுவதே தமிழில் செயலி என்று அழைக்கப்படுகிறது.

அதுவே படத்தின் தலைப்பு. குழந்தைகளை மையமாக கொண்ட இந்தப் படத்தில் தம்பி ராமய்யா, விடிவி கணேஷ், ரோபோ சங்கர், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், பிரேம், இனியா ஆகியோரும் நடிக்கிறார்கள். நேற்று பூஜையுடன் படப்பிடிப்புகள் தொடங்கியது.

Leave a Response