“அம்மன்” அவதாரம் எடுக்கும் பிக்பாஸ் ஜூலி..!

ஜல்லிகட்டு போராட்டத்தில் மக்களிடம் நல்ல பெயரை சம்பாதித்து அந்த நல்ல பெயரை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏலத்துக்கு விட்டவர் மரிய ஜூலியானா. கிடைத்தது என்னதான் கெட்ட பெயராக இருந்தாலும், அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில், நிகழ்ச்சி தொகுப்பு, விளம்பரம், திரைப்பட நாயகி என வேற லெவலுக்கு சென்று விட்டார் ஜூலி.

போதாக்குறைக்கு அரசியல் கட்சி ஒன்றும் ஆரம்பிக்க போகிறேன், என்றுவேறு சில நாட்களுக்கு முன் குண்டை தூக்கிப் போட்டிருந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்தே மக்கள் மீளாத நிலையில், அவர் அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி, சினிமா ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பிட்ட புகைப்படம் அவர் நடிக்க இருக்கும் அம்மன் தாயி என்ற திரைப்படத்தை சேர்ந்தது என்றும், அதில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கும் தகவலும் தற்பொழுது தெரிய வந்துள்ளது.

எதிர்மறை விமர்சனங்களால் பிரபலமானவர் என்பதனால், இவருக்கு ரசிகர்களை விட வெறுப்பவர்கள் அதிகம் எனும் நிலையில், டாக்டர் அனிதா, அம்மன்தாயி என அவரது குணாதிசயங்களுக்கு சிறிதும் பொருந்தாத வேடங்களில் நடித்து வரும் ஜூலியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Leave a Response