தென் தமிழகம், வடக்கு உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு !!

தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் இருந்து தென் தமிழகம் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகவும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காணப்படுவதாகவும் கூறியுள்ளது.

இதனால், தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல், வடக்கு கடலோர மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலன்குளத்தில் 12 செண்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Response