வட தமிழகத்தில் “இடியுடன் கூடிய மழை” பெய்ய வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல்

monsoon-PTI

அடுத்து வரும் 24 மணிநேரத்தில் வட தமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:

“தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலு குறைந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது. ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற பகுதி தென்னிந்திய பகுதிகளில் நிலவுகிறது.

இதன்காரணமாக, அடுத்து வரும் 24 மணிநேரத்தில் வட தமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய மேற்கு மற்றும் வட மேற்கு மாவட்டங்களில், ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், மாலை மற்றும் இரவு வேளையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால்  மீனவர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை” என பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Leave a Response