சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த விடமாட்டோம் என தமிழ் அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின.
இதனை தொடர்ந்து சென்னையில்வரும் 20 ஆம் தேதி நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது
சென்னை ராஜஸ்தான்இடையே வரும்20 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறஇருந்தது.
நேற்று பெரும்சவாலுக்கு இடையே போட்டி நடைபெற்றது.இந்நிலையில், இனி வரும் போட்டிகள் நடக்கும் போதும், அன்றையதினம் போராட்டம் வலுக்கும் என பல்வேறு கட்சியினர் தெரிவித்து இருகின்றனர்.
இந்நிலையில்,இன்று டெல்லியில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நடத்திய ஆலோசனையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்அடுத்து நடைபெற இருந்த 6 விளையாட்டு போட்டிகளும் வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது என்ற தகவல் வெளியானது.
இதனைதொடர்ந்து தற்போது நாளை முதல் டிக்கெட் விற்பனைசெய்ய இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.