குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 23ஆக உயா்வு…

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 23ஆக உயா்ந்துள்ளது.

மலையேற்ற பயிற்சிக்காக குரங்கணி பகுதிக்கு சென்ற 36 போ் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனா். மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு அவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. முதல் நாளில் 27 போ் மீட்கப்பட்டனா். இவா்களில் 10 போ் எந்தவித பாதிப்பும் இன்றி திரும்பியதால் அவா்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனா்.

மீதம் இருந்தவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டது. மறு நாள் நடைபெற்ற மீட்பு பணியில் 9 போ் உயிாிழந்த நிலையில் மீட்கப்பட்டனா். 27 பேருக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி தொடா்ந்து பலி எண்ணிக்கை அதிகாித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுவேதா என்ற பெண் சிகிச்சை பலன் இன்று நேற்று (வியாழன் கிழமை) மாலை உயிாிழந்தாா். இதனைத் தொடா்ந்து உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 23ஆக உயா்ந்துள்ளது.

Leave a Response