குரங்கணி காட்டுத் தீயில் 9 பேர் உயிரிழப்பு: தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

kurangagini
குரங்கணி காட்டுத் தீ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.

சென்னையை சேர்ந்த 6 பேர் தவிர, 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். டிரக்கிங் சென்ற 36 பேரில் 27 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 10 பேர் எந்த காயமும் இல்லாமல் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிக்காக ஏற்கனவே 2 ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட உள்ளது என்றும் காயமடைந்தவர்களுக்கு மதுரையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 9 பேரின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response