மதுரையில் தனியார் வங்கி ஒன்றில் தீ விபத்து !

மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளை அமைந்துள்ள கட்டடத்தின் 2வது தளத்தில் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீர்ர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்த முதல் கட்ட விசாரணையில், மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Leave a Response