குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!

kurangani-dire-45140
தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுற்றுலா சென்றவர்கள் சிக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் சிக்கினர். இவர்களில் சிலர் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எஞ்சியவர்கள் மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்த நிலையில், மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சக்திகலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Response