இரட்டை கதாப்பத்திரங்களை ஏற்று ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த படம் தான் `அண்ணாதுரை’. இப்படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்து வந்த காளி படம் அடுத்ததாக ரிலீஸாக இருக்கிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், படம் ஏப்ரலில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தை மார்ச் இறுதியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் பட அதிபர்கள் ஸ்றைக்கால் படத்தின் ரிலீஸ் தற்போது மீண்டும் தள்ளிப்போயுள்ளது.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.