சோறு சாப்பிடுகிற ஒவ்வொருத்தனுக்கும் இந்த காவிரி பிரச்சனை பொருந்தும்: நடிகர் சசிகுமார்

காவிரி பிரச்னை, சோறு சாப்பிடுகின்ற ஒவ்வொருத்தனுக்கும் உள்ள பிரச்சனை என்று நடிகர் சசிகுமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சினிமாத்துறையினரும் காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான சசிகுமாரும் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். ‘‘இது விவசாயிகளுக்கு மட்டும் எழும் பிரச்னை இல்லை. தினமும் சோறு சாப்பிடுகிற நாம் ஒவ்வொருத்தனுக்கும் உள்ளே எழும் பிரச்சினை. காவிரி மேலாண்மை வாரியம் அமைவதுதான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு.

உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களுக்காக நாம் போராட வேண்டும்” என்று ட்விட்டரில் தன்னுடைய ஆதங்கத்தை சசிகுமார் பதிவிட்டுள்ளார்.

Leave a Response