பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் காவிரி பாய்ந்தோட போகிறது – தமிழிசை

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறும்போது, “தமிழகத்தில் நிச்சயம் காவிரி பாய்ந்தோடத்தான் போகிறது என்பதில் மாற்றமில்லை. ஆனால் அது பாஜகவால் மட்டுமே தான் நிறைவேறும்.

தமிழகத்தில் மாற்றம் தேவை என்ற நிலையில், போராட்ட களமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். தமிழகத்தை வன்முறை களமாக மாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனத்தில் பாகுபாடும், காவி ஆதிக்கம் உள்ளது என கூறப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது. திறமை, கல்வி அடிப்படையில் மட்டுமே துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Response