ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடல்- ஆளில்லாத அரசு பேருந்துகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் சற்று சிரமம் அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் கேரள அரசுப் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

திருப்பதி, சித்தூரில் இருந்து தமிழகத்திற்கு வழக்கம்போல் ஆந்திர அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருச்சியில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மூலம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோவையில் 90%, திண்டுக்கல்லில் 75%, கிருஷ்ணகிரியில் 90% அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் 85% பேருந்துகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 100% பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 80% அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்தப் பேருந்துகளில் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

Leave a Response