ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி..!

பிரேமம் சாய் பல்லவி, பிடா படத்தில் நடித்து தெலுங்கிலும் முன்னணி நடிகையாகி விட்டார். அதைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள கரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நடித்து வரும்போதே தனுசுடன் மாரி-2, சூர்யாவின் என்ஜிகே ஆகிய படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் அவர்.

இந்த நிலையில், அடுத்தபடியாக ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் சாய் பல்லவியை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சாய்பல்லவியும் ஒப்புதல் அளித்து விட்டாராம். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்கிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

Leave a Response