பல்வேறுபட்ட பாடல்களின் கலைவை தான் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” இசை – இசையமைப்பாளர் ஷபீர்..!

ஒரு பாடல் கேட்பவர்களின் உணர்வுகள் மற்றும் ரசனைகளை கொண்டிருந்தாலும், மெதுவாக மனதை ஆட்கொண்டு, கேட்க கேட்க அவர்களை அடிமையாக்கி, பல முறை கேட்டபிறகு அதன் பின்னால் இருக்கும் படைப்பாளரை பற்றிய யோசனையை தருவது அரிதான விஷயம். ஒரு படைப்பு என்பது மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் போது, அதை ரசிப்பவர்கள் அதன் சாராம்சத்தை கருத்தில் கொண்டு, ‘படைப்பாளி’ பற்றிய பகுத்தறிவு சிந்தனையை பெறுவார்கள். சகா படத்தின் ‘யாயும்’ என்ற மெலடி பாடல், அதன் இசையமைப்பாளர் ஷபீரை ஒரே இரவில் தமிழ் சினிமா முழுக்க அவர் புகழை பரப்பியது. அடுத்தடுத்து சிறந்த ஆல்பங்களை கொடுத்த ஷபீர், தற்போது ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல்வேறுபட்ட பாடல்களின் கலைவையை கொண்டிருப்பதால் இந்த ஆல்பம் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ஆரம்பம் முதல் தன் பாடல்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு வரை அனைத்தையும் பற்றி ஷபீர் கூறும்போது, “அனைத்து பாராட்டுக்களும் சிவகார்த்திகேயன் அவர்களை தான் சாரும். உண்மையில் என் ‘யாயும்’ பாடல் பெரிய வெற்றியை பெறுவதற்கு முன்பே என்னை முதல் ஆளாக பாராட்டியவர் சிவகார்த்திகேயன். இது வெறும் செயற்கையான பாராட்டு மட்டுமல்ல, அவர் இந்த ஆல்பத்திற்கு நான் இசையமைத்து வைத்திருந்த மற்ற பாடல்களையும் கேட்டார்.

நாம் நிச்சயம் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்து பணிபுரிவோம் என அவர் கூறியதை கேட்பதற்கு உற்சாகமாக இருந்தது. அப்படி தான் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ மூலம் எங்கள் பயணம் தொடங்கியது. இது எனக்கு முற்றிலும் ஒரு புதிய வகையான படம், என் முயற்சிகளை இந்த படத்துக்கு நான் கொடுத்துள்ளேன்” என்றார்.

ஒரு திரைப்படத்தை முதலில் பார்க்கும் வாய்ப்பை பெறும் வாய்ப்பு கிடைப்பதால், இசையமைப்பாளர்கள் மிகுந்த பாக்கியம் பெற்றவர்கள். இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது, “முழுக்க முழுக்க இது ஒரு ஜாலியான படம், சிரிக்க நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன. அதே நேரம் திரும்ப எடுத்து செல்ல நல்ல செய்தியும் இருக்கிறது. இது எதையும் பிரச்சாரம் செய்யாது, நம்மை யோசிக்கவும், செயல்படவும் வைக்கும்” என்றார்.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, கலை அரசு இணை தயாரிப்பு செய்திருக்கிறார். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் மற்றும் ராதாராவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

Leave a Response