திருப்பதி ஸ்ரீ கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சிறிய சேஷ வாகனத்தில் கோதண்டராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீ கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. அந்தவகையில், விழாவின் 2-ம் நாளான இன்று காலை சிறிய சேஷ வாகன வீதியுலா நடந்தது.
சிறிய சேஷ வாகனத்தில் தாங்கியிருப்பது வாசுகி என்ற நாகம் ஆகும். ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் நாகங்களில் நான் வாசுகியாக இருப்பேன் என்பார். அதை உணர்த்தும் வகையில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி 5 தலைகளை கொண்ட சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.