திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்துக்கு புது ரூட்!

tirupathitemple-22-1495455666-04-1501830935
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் மாட்டித் தவிக்காமல் இருப்பதற்காக திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளனர்.

சுவாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் வெளியே வரும் இடத்தில் வெள்ளி கதவின் வலது திசையில் 15 முதல் 20 அடி உயரத்திற்கு உள்ள இடத்தில், இரும்புப் படி அமைத்து பிரசாதங்கள் வழங்கும் இடம் உள்ளது. அதன் அருகே பக்தர்கள் வெளியே வரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனி இந்தப் படி வழியாகப் பக்தர்களை அனுமதிக்கத் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது வெள்ளி கதவு அருகே தரிசனத்திற்கு உள்ளே செல்லும் பக்தர்களும் வெளியே வரும் பக்தர்களும் குறுகிய வழியில் வந்து செல்கிறார்கள். இதனால் பக்தர்கள் மத்தியில் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக இந்த புதிய வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Response