திராவிட அரசியல் உடன் களமிறங்கும் கமல்

kamal

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். ரஜினி, ஆன்மிக அரசியலுடன் களமிறங்க, கமலோ திராவிட அரசியல் உடன் களமிற்குகிறார். பிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், அன்றிலிருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்குவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை துவக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.திராவிடம்இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ‛கலாமுக்கு கனவுகள் பல இருந்தன. அவரைப் போலவே பல கனவுகளை கொண்டவன் நான். திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல; அது நாடு தழுவியது. விமர்சிப்பது மட்டுமே என் வேலையல்ல இறங்கி வேலை செய்ய வந்தவன் நான். மிகப் பெரிய சரித்திரமும், தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது என்றார்.

Leave a Response