அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் வீட்டுக்கு மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சென்றபோது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், அதிமுக வெற்றி பெற எங்கள் வாக்கு வங்கியே போதுமானது என்றார். மேலும் பாஜக ஒரு பொருட்டே கிடையாது என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எதற்கெடுத்தாலும் டெல்லிக்கு காவடி தூக்குற அதிமுக. ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ஒரு பொட்டே கிடையாது…! அதிமுகவை வெளியில் இருந்து யாரும் அழிக்க தேவையில்லை. இணையாத மனங்கள் இருக்கும்போதே இவ்வளவு பேச்சு அதிகம். ஜோதி பிரகாசமா எரியுது. சீக்கிரமே… என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பார்.