இலங்கை அணியை கதறவிட்ட இந்திய அணி- மீண்டும் களத்தில் இறங்க ரெடி!

india srilanka

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. முரளி விஜய் மிகவும் சிறப்பாக விளையாடி 155 ரன்கள் எடுத்தார்.

மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இவர் 243 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.ரோஹித் 65 ரன்கள் எடுத்தார்.

-india-srilanka67

முதல் இன்னிங்சில் இந்தியா 536 ரன்கள் எடுத்தது. 7 விக்கெட்டுகள் இழந்து இந்தியா விளையாடிக் கொண்டு இருந்த போது இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது.

அதன்பின் களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலேயே சொதப்பியது. முதல் பந்திலேயே இலங்கையின் திமுத் கருணாரத்னி டக் அவுட் ஆனார். அதன்பின் இலங்கை அணி மிகவும் நிதானமாக ஆடியது.

insl

இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் 147 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 373 ரன்கள் எடுத்து இருக்கிறது. இலங்கை இந்தியாவை விட 163 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. அஸ்வின், இஷாந்த் சர்மா மிகவும் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முகமது சமி, ஜடேஜா தலா 2 விக்கெட்கள் எடுத்துள்ளனர்.

Leave a Response