லட்சத்தீவை ஓங்கி அடித்துக்கொண்டு இருக்கும் ஓகி புயல்- குஜராத் நோக்கி செல்லக்கூடும் என தகவல்!

puyal2

நேற்று கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது ஓகி புயல். தென் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் தெற்கு பகுதிகளை சூறையாடிய படியே லட்சத் தீவு நோக்கி நகர்ந்தது.

கடலில் இருந்தபடியே தென் தமிழகத்தையும் தெற்கு கேரளத்தையும் ஆட்டிப்படைத்த ஓகி புயல் ஏராளமான பொருட்சேதத்தையும் உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.

puyal1

இந்நிலையில் லட்சத்தீவை நெருங்கியுள்ள ஓகி புயல் மினிக்காய் பகுதிக்கு அருகே அரபிக்கடலில் 80 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

சூறைக் காற்றுடன் கனமழையும் பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்திற்கு லட்சத்தீவு பகுதியில் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

puyal3

கல்பெனி, மினிகாய், கவுரட்டி, அகாட்டி, அடரோத், கடாமத், அம்னி ஆகிய தீவுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மக்கள் வீடு மற்றும் முகாம்களை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஓகி புயல் மேற்கு நோக்கி நகர்ந்து குஜராத் நோக்கி செல்லக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் லட்சத்தீவு மற்றும் கேரள மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Response