புதுச்சேரியில் அரசு பால் நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

milk

புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனங்களில் ஒன்று பாண்லே. குருமாம்பேட்டில் இயங்கும் இந்தப் பால் உற்பத்தி நிறுவனத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர மற்றும் தினக்கூலி ஊழியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவமனைகள், பொதுமக்களுக்குத் தேவையான பால் இந்நிறுவனத்தில் இருந்துதான் அன்றாடம் சப்ளை செய்யப்படுகிறது. மேலும், நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் பாண்லே கடைகள் திறக்கப்பட்டு நெய், ஐஸ்க்ரீம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

milk1

இந்நிலையில் பணியாளர்களில் ஒரு பிரிவினர் இன்று திடீரென்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளை நிறைவு செய்த, அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.ஆர்.தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்றைய பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. மேலும், உடனடியாக அரசு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Leave a Response