தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கும் மழை! சென்னை உட்பட 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிப்பு!

30-1512034676-rain234535

ஓகி புயல் மற்றும் கனமழையால் சென்னை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல் உட்பட 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவனா ஓகி புயலால் நேற்று முதல் தென் மாவட்டங்களில் கனமழை வெளுக்கிறது.

 

கன்னியாகுமரி மாவட்டத்தை ஓகி புயல் உருக்குலைத்துவிட்டு அரபிக் கடலை நோக்கி நகர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்களும் மின் கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. இம்மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று முதலே சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லையில் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

 

இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகி புயல் மற்றும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோயில், மானாமதுரை, இளையான்குடி மற்றும் திருப்புவனம் ஆகிய 5 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் கலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

 

 

Leave a Response