ஒப்பந்ததாரரை செல்போனில் மிரட்டிய அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ!

Samayapuram_Mariyamman_Temple_Entrance-1

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற ஆலயங்களில் ஒன்று. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் இந்தக் கோவிலில், சுமார் ரூ.20 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மற்றும் விரிவாக்கப் பணிகளை செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெகுவிமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

MLA_00101

இந்த டெண்டருக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் எனும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரை திருச்சி மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரி தொடர்புகொண்டு பேசிய உரையாடல் விபரம் இதோ:

எம்.எல்.ஏ பரமேஸ்வரி : கோவில் எலக்ட்ரிகல் ஒர்க் டெண்டர் கேட்டிருந்தீங்களா,?“

காண்ட்ராக்டர் மணிகண்டன்: “ஆமாம் மேடம்.”

எம்.எல்.ஏ பரமேஸ்வரி : “இது காம்ப்ரமைசர் டெண்டர்தாங்க. ஓபன் டெண்டர்னா எல்லோரும் எடுக்கலாம். இது நாங்களா பார்த்து முடிவு பண்ணுவது. நீங்கள் டெண்டர் எடுக்கணும் என்றால் என்னை வந்து பார்க்கனும் இல்லையா..?நான் தொகுதி எம்.எல்.ஏ “

manikandan_23271

காண்ட்ராக்டர் மணிகண்டன்:

“மேடம்! நான் பி.டபல்யூ காண்க்ட்ராக்டர். அதுவும் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர். அதனால் டெண்டர் எடுக்க எங்க வேண்டுமானால் டெண்டருக்கு அப்ளிகேசன் போடுவேன். எதுக்கு உங்களை பார்க்கனும் “

எம்.எல்.ஏ பரமேஸ்வரி: “டெண்டர் எடுக்கனும் என்றால் முன்னாடியே வந்து சொல்லியிருக்கனும்னு இல்லைங்க. உங்களை ஏன் நேரில் பார்க்கனும் என நீங்கள் பேசுவது எல்லாம் சரியாகாது“

காண்ட்ராக்டர் மணிகண்டன்: “இது சாதாரண எலக்ட்ரிகல் ஒர்க் மேடம், இதுல யாரும் தலையிடமாட்டார்கள். இருக்கிற 5 வேலையில் 2 வேலை நான் எடுக்கிறேன். மற்றதை நீங்க நினைக்கிறவர்களுக்கு கொடுங்க. என்ன பார்மாலிட்டியோ அதை வாங்கிக்கொள்ளுங்கள். சில நாட்களுக்கு முன்னால், டெக்னிக்கல் எஜூகேஸனல் மினிஸ்டர் அன்பழகன் சாருக்கு கூட நான் வேலை செய்து கொடுத்தேன். அவர்கள் கூட இதுபோன்ற விசயங்களில் தலையிட மாட்டார்கள். “

எம்.எல்.ஏ பரமேஸ்வரி: “எந்த மினிஸ்டர். யாரை சொல்லுறீங்க“

காண்ட்ராக்டர் மணிகண்டன் : “டெக்னிக்கல் மினிஸ்டர் அன்பழகன் சார்“

எம்.எல்.ஏ பரமேஸ்வரி: “இதுக்கெல்லாம் ஏங்க அவங்கள்ட்ட பேசுறீங்க. நேரில் வந்துபாருங்க. நீங்களே டெண்டர் எடுத்துக்கொள்ளுங்கள். மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு வாங்க. எல்லாம் பேசிக்கலாம்” என அழைத்தபடி துண்டிக்கப்படுகிறது அழைப்பு.

ஒப்பந்தக்காரர் மணிகண்டன் இதுகுறித்து கூறுகையில், “கோயிலின் செயல் அலுவலரும், இணை இணையருமான குமரதுரை, தொகுதி எம்எல்ஏ பரமேஸ்வரிமுருகனை பார்த்து விட்டு வாங்க, எம்.எல்.ஏ சொன்னால்தான் உங்களுக்கு டெண்டர் கிடைக்கும் எனக் கூறினார்.

அதற்குநான், கோயில் நிதியில் செய்யும் வேலைக்கு நான் ஏன் எம்.எல்.ஏவை பார்க்கனும் எனக் கூறினேன். ஆனால் அவர் எம்.எல்.ஏவை சந்தித்து நடைமுறைகளைப் பார்த்து விட்டு வாங்க, எம்எல்ஏ சொன்னால் டெண்டர் தருகிறேன் எனச் சொல்கிறார்.

அதற்கு நான் மறுத்ததால், டெண்டரை ரத்து செய்து விட்டார்கள். இறுதியாக 30% கமிசன் கேட்கிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்தி, எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் மீதும், இணை ஆணையர் குமரகுரு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Leave a Response