திருப்பூரில் ஓபிஎஸ் – இபிஎஸ் அணியினர் இடையே வாக்குவாதம்!

j main-qimg-

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிச.5-ம் தேதி காலமானார். அவர் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாள் வரவிருக்கிறது. இதையொட்டி திருப்பூரில் அமைதி ஊர்வலம் நடத்துவது தொடர்பாக, திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன், அவைத் தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது பேசிய ஆனந்தன்:-

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு முடக்கப்பட்ட இரட்டை இலையை ஜெயலலிதா மீட்டு, ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்றினார். இன்றைக்கு பிரிந்த இயக்கம் இணைந்துள்ளது. எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் அதிமுக தொண்டர்கள் மாற்றுக் கட்சிக்குச் செல்லவில்லை. முதல்வர் கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து இரட்டை இலையை மீட்டுள்ளனர். வரும் 5-ம் தேதி ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஒவ்வொரு தொண்டரும் தங்களது வீட்டின் முன்னால் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். திருப்பூர் குமரன் பூங்காவிலிருந்து காலை 10 மணிக்கு அமைதி ஊர்வலம் புறப்பட்டு 11மணிக்கு மாநகராட்சி அருகில் மலரஞ்சலி செலுத்தப்படும் என்றார்.

ops-1

ஓபிஎஸ்-க்கு எதிராக மீம்ஸ்:-

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் எம். சண்முகம் தனது நன்றியுரையில், மாவட்டச் செயலாளர் 30 முக்கிய நிர்வாகிகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேச வேண்டும். கீழ்நிலையில் இருப்பவர்களுக்கு நாங்கள் தகவல் அளித்து விடுவோம்.

முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனின் உதவியாளர் ஷாஜகான், தனது முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்பில் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன் ஆகியோரை விமர்சித்து தொடர்ந்து மீம்ஸ் போடுகிறார் என்றார்.

a3

இதையடுத்து,அவரது மைக் அணைக்கப்பட்டது. இதனால் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணியினரிடையே கடும் வாக்குவாதம், சலசலப்பு எழுந்தது. கருத்து சொல்ல அனுமதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தினர். இதையடுத்து கட்சி நன்றாக இருக்க, அனைவரும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்றார் சண்முகம். இதையடுத்து கூட்டம் நிறைவடைந்தது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்  கூறும்போது, ‘நான் அனைவரையும் செல்போனில் தொடர்பு கொள்ள இயலாது. கட்சி அலுவலகத்தில் இருந்து அழைப்பு கொடுப்பார்கள். முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் யாராவது கருத்து போட்டால், அதற்கு நாம் அதை கூட்டத்தில் வைத்து பேச இயலாது. அடுத்து நடைபெறும் அதிமுக கூட்டத்தில் எந்த சலசலப்பும் இருக்காது’ என்றார்.

Leave a Response