நிர்மலா சீதாராமனின் கோபத்திற்கு ஓ.பி.எஸ் கொடுத்த பேட்டிதான் காரணமா?

டெல்லியில் சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தன் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் மற்றும் அவரின் குடும்பம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு தமிழகத்தில் தீவிரமாகியுள்ள நிலையில், நேற்று டெல்லி சென்றார் ஓபிஎஸ். நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோரை அவர் சந்திக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரரை மதுரையிலிருந்து ராணுவ விமானம் மூலம் சென்னை அழைத்து வர உதவி செய்த நிர்மலா சீதாராமனுக்கு நன்றி கூறவே நான் இங்கு வந்தேன் என ஓ.பி.எஸ் பேட்டி கொடுத்தார். இது நிர்மலாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏனெனில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக பாராளுமன்றத்தில் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ராகுல். இந்த விவகாரம் அடங்குவதற்குள், ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை ஒ.பிஎஸ்-ஸின் சகோதரரை அழைத்து வர எப்படி நிர்மலா சீதாராமன் அனுமதிக்கலாம் என அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது.

ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாமல் தன்னை காப்பாறுமாறு கோரிக்கை வைக்கவே ஓபிஎஸ் டெல்லி சென்றார் எனவும், அது பிடிக்காத பாஜக மேலிடம் ஓபிஎஸ்-ஐ சந்திக்காமல் தவிர்க்குமாறு நிர்மலா சீதாராமனுக்கு அறிவுறுத்தியதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விவகாரத்தில் நிர்மலா சீதாராமனின் கோபத்திற்கும் ஓபிஎஸ் ஆளாகியிருந்தது மேலும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

Leave a Response