கனிமொழியை வெல்லக்கூடிய சக்தி தமிழிசைக்கு மட்டுமே உள்ளது – முதல்வர் பழனிசாமி..!

கனிமொழியை வெல்லக்கூடிய சக்தி தமிழிசை சவுந்தரராஜனுக்கு மட்டுமே இருப்பதாக அமித்ஷா கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி கூறினார்.

கனிமொழியின் பொய் பிரசாரத்தை முறியடித்து தமிழிசையை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக போடுவது நாடகம்; மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசு தான் என்றும் பேசினார்.

இதே கூட்டத்தில் பேசிய தமிழிசை;

நடந்து வந்தாலே வெற்றியை தருபவர் அமித்ஷா; தற்போது பறந்து வந்துள்ளார், அதனால் வெற்றி நிச்சயம் என்றும், தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும்; எந்த தியாகம் செய்தாவது வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்தார்

Leave a Response