மீன்வளத்துறை அமைச்சரை சரமாரியாக விளாசி எடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.!

vetrivel

சென்னையில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது அமைச்சர்கள் அனைவரும் ஓடி ஒளிந்து கொண்டனர். என்னைப் போன்ற அடிமட்ட தொண்டர்கள்தான் போயஸ் கார்டனுக்கு சென்றோம்.

ஜெயலலிதாவுடன் சிறு நரிகள் இருந்ததால்தான் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக கூறுகின்றனர். சிங்கத்துடன் சிங்க கூட்டம்தான் இருக்க முடியும். இவர்கள்தான் சிறு நரிகள். பயந்து போய் கட்சியையும், வாழ வைத்தவர்களையும் காட்டி கொடுக்க கூடாது.

j main-qimg-

ஜெயலலிதாவை காட்டிக் கொடுத்து விட்டு (அப்ரூவர்) நீங்கள் ஒதுங்கி விடுங்கள் என்று சசிகலாவை தி.மு.க. பலமுறை வற்புறுத்தியது. ஆனால் சசிகலா அதற்கு இடம் கொடுக்காமல் 33 வருடம் கூடவே இருந்தார்.

ஜெயலலிதா இருக்கும் போது முதல்வர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டாரா? இல்லையே.

ஆனால் ஜெயக்குமார் சபாநாயகராக இருந்த போது முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு ரகசிய கூட்டம் போட ஆரம்பித்தார். இது ஜெயலலிதாவுக்கு தெரிய வந்ததும் உடனே சபாநாயகர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

ஜெயலலிதாவுக்கு மன்னிக்கும் குணம் இருப்பதால் ஜெயக்குமாருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

தவறு செய்பவர்களுக்கு அந்தந்த சமயத்தில் ஜெயலலிதா தண்டனை கொடுத்து விடுவார். ஆனால் தேவையில்லாமல் ஆமைக்கு கை, கால் முளைத்த மாதிரி தினமும் பத்திரிகை தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்து விட்டு போகக்கூடாது. அது உருப்படாது. புகுந்த வீடும் உருப்படாது.

மிக விரைவில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். உங்களுக்கு தலையில் இடி இறங்கும். அப்போது நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்.

தமிழ்நாட்டு மக்கள் எப்போது தேர்தல் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். உங்களுக்கு டெபாசிட் போக வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

jayak

எனவே அமைச்சர் ஜெயக்குமார் தேவையில்லாமல் தினமும் பேட்டி கொடுத்து வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம். துறை ரீதியாக பேட்டி கொடுத்தால் அதை யாரும் விமர்சனம் செய்து பேச போவதில்லை.

ஆனால் சம்பந்தம் இல்லாமல் சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்பத்தினரை பற்றி பேசினால் பொறுத்து கொண்டிருக்க மாட்டோம். சிறுநரிகள் சிங்கத்துடன் கூட இருந்தது மாதிரி பேசுகிறார். இந்த ஆள் எப்படி பி.ஏ.பி.எல். படித்தார் என்று தெரியவில்லை.

குழந்தைக்கு கூட தெரியும் பாம்பு-பல்லி ஒன்றாக இருக்க முடியுமா? பாம்பு இருக்கும் இடத்தில் பல்லியே இருக்காது. அதேபோல் சிங்கம் இருக்கும் இடத்தில் சிறுநரிகளுக்கு வேலையே இல்லை. இவர்கள்தான் சிறுநரிகள். ரோட்டில் நின்று கொண்டு சசிகலா குடும்பத்தில் யாரிடமாவது பழக்கம் கிடைக்குமா? என்று அலைந்தவர்கள் இவர்கள்.

இன்றைக்கு அவர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் மீனவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அதை தீர்க்க ஜெயக்குமார் செல்வதில்லை. ஆனால் சொத்து கணக்கை பேசுகிறார். ஜப்தி செய்யனும் என்கிறார்.

1991 தேர்தலில் அவர் சொத்து கணக்கை காட்டியது தேர்தல் கமி‌ஷனில் உள்ளது. உனது சொத்து கணக்கில் பல கோடி ரூபாய் ஊரை அடித்து உலையில் போட்டிருப்பாய். என் சொத்து கணக்கில் என் அப்பா சொத்து பல கோடி போயிருக்கும்.

sasittv

ஜெயக்குமார் வீடு இதற்கு முன்பு எப்படி இருந்தது? 8 அடி சந்தில் இருந்தது. இப்போது சென்று பாருங்கள் தெரியும். பழைய சம்பவங்களை கிளற கூடாது என்று பார்க்கிறேன். ஜெயக்குமார் பேசுவதை நிறுத்தினால் நல்லது.

சசிகலா, டி.டி.வி. தினகரனை பற்றி பேச அவருக்கு ஒரு தகுதியும் கிடையாது. நீங்கள் துரோகம் செய்து விட்டீர்கள். உங்கள் துரோகத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றுள்ளோம். அதை சந்திக்க வழி பாருங்கள்.

போயஸ் கார்டனில் அம்மாவுக்கு தெரியாமலேயே சசிகலா இருந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. இவர்கள் எப்படி அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று மக்கள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் பதவி முக்கியமான பதவி. எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்ததால்தான் முதல்-அமைச்சர் ஆனதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். உங்களை யார் சொல்லி எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். வீடியோ பதிவு உள்ளதை மறந்து விட்டு பேசாதீர்கள்.

முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்ததற்காக சாஷ்டாங்கமாக சசிகலா காலில் விழுந்து வணங்கியவர் எடப்பாடி பழனிசாமி. இதற்கும் வீடியோ பதிவு உள்ளது.

போயஸ்கார்டனில் சோதனை நடந்தபோது அதை தடுக்க சொல்லவில்லை. சோதனை நடந்தபோது அமைச்சர்களுக்கு பதட்டம் வரவேண்டாமா? வரவில்லையே? அந்த தெய்வத்தால்தானே வளர்ந்தோம். அங்கேதானே எல்லோரும் உட்கார்ந்திருப்போம். இந்த சமயத்தில் கூட அங்கே போய் இவர்கள் நிற்கவில்லை என்றால் என்ன விசுவாசம்?

Poes-Garden

போயஸ் கார்டனில் நடந்த சோதனை அரசியல் ரீதியானது என்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் கூறி விட்டனர்.

இந்த மாதிரி கோமாளித்தனமான ஆட்சி இருந்தால் கவர்னர் கை ஓங்கும். எதிர்க்கட்சிகள் கை ஓங்கும். நீங்கள் ஆண்பிள்ளைதனமாக ஆட்சி நடத்தினால் உங்கள் பக்கம் யார் வருவார்கள்?

சசிகலா சார்ந்த குடும்பம் இதுவரை தவறாக ஜெயலலிதாவை பேசியது கிடையாது. திவாகரன் பேசும்போது, சசிகலாவை பாதுகாப்பு இல்லாமல் ஜெயலலிதா விட்டு சென்று விட்டார் என்று கூறினார். அந்த ஆதங்கம் எனக்கும் உண்டு. இது இயற்கை.

vetrivel (1)

வீட்டில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் இறக்கும் சூழ்நிலை வந்தால் எல்லோருக்கும் சங்கடம் இருக்கத்தான் செய்யும். இதை சொல்லும்போது ஜெயலலிதாவை காட்டிக் கொடுப்பதாக சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ஜெயலலிதாவுக்காக தான் மக்கள் ஓட்டு போட்டார்கள். இப்போது இருக்கிற அரசாங்கத்தை உருவாக்கியது சசிகலா. ஆனால் இப்போது இந்த அரசாங்கம் மக்களுக்காக செயல்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response