சுட்டது இந்திய கடலோர காவல் படை இல்லை- அடித்து சொல்கிறார் பாதுகாப்பு துறை அமைச்சர்!

fig

கடந்த 14 ஆம் தேதி  கச்சத் தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இலங்கை மீனவர்கள் என நினைத்து தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மீனவர் அந்தோணிபிச்சை என்ற மீனவரின் இடது முழங்கையில் குண்டு பாய்ந்து வெளியேறி சென்றது. மற்றொரு மீனவரான ஜான்சனின் கைகளிலும் குண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த மீனவர்கள் இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

sithtaaraman

இது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தியாள்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இந்திய கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டார்கள் என்பது தவறான தகவல் என்றும், அவர்கள் கொடுத்த குண்டுகள் கடலோர காவல் படையினரிமே இல்லை என்றும் தெரிவித்தார்.

fig1

மீனவர்களிடம் இருந்த கைப்பற்றப்பட்ட ரப்பர் குண்டுகள், கடலோர காவல் படைக்கு சொந்தமானது அல்ல என்றும் ஆனால் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

தமிழக மீனவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

Leave a Response