இலங்கை மீனவர் என நினைத்து- இந்திய மீனவர் மீது துப்பாக்கி சூடு!

Alleppey,India-July 23,2009: Fishing in Arabian sea by local fishermen July 23, 2009 in Alleppey, India.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்தனர்.
 அப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள், மீனவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மீனவர்கள் தமிழில் பதிலளித்துள்ளனர்.

fishஆனால் கடற்படை வீரர்களோ இந்திய மீனவர்கள் என்றால் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என கூறி தாக்கியுள்ளனர். ஒருகட்டத்தில் இலங்கை மீனவர்கள் என நினைத்து திடீரென ரப்பர் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.sri

இதில் மீனவர்கள் கடுமையாக அதிர்ச்சியடைந்தனர். கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பிச்சை, ஜான்சன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கடலோர காவல்படையினர் மறுத்துள்ளனர்.

Leave a Response