ஐ.டி. ரெய்டில் கோடி கணக்கில் பணம் சிக்கியதாக வருமான வரித்துறை தகவல்

Income-Tax-department

சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான 190 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் நிறைவடைந்துவிட்டன. இச்சோதனைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத வருமான வரித்துறை அதிகாரிகள், மொத்தம் ரூ1430 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 விவேக்கின் 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சசிகலா குடும்பத்தின் 15 வங்கி லாக்கர்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன. ரூ7 கோடி மதிப்பிலான ரொக்கம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

siil1

அத்துடன் 50க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. இந்த போலி நிறுவனங்கள் மூலம் கருப்புப் பணம் பெருமளவு மாற்றப்பட்டிருக்கிறது. சென்னைய அடுத்த படப்பையில் மிடாஸ் மதுபான ஆலையில் மிக முக்கியமான ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. இங்கு ரூ19 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

திவாகரன் மகள் ராஜமாதங்கி, வெளிநாடுகளில் இருந்து சொகுசுகார்களை இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதும் இச்சோதனையில் அம்பலமாகியுள்ளது.