கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

30581

வடகிழக்கு பருவமழையை ஒட்டி வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கும் சில நேரம் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி நிலை கொண்டுள்ளது. அது வட திசையில் நகர்வதால் இன்னும் இரண்டு நாளில் மழை படிப்படியாக குறையும்.

அடுத்த இரண்டு தினங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புற நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில முறை மழை பெய்யும், சமயங்களில் சற்று பலத்த மழையாக இருக்கக்கூடும்.

download

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் இரண்டு விதமாக வானிலை மாற வாய்ப்பு உள்ளது என பதிவிட்டுள்ளார்.

அவரது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

சென்னை மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் மாவட்டம் குறிப்பாக திருவள்ளூரில் இன்று பகல்நேரத்திலும் இடைவெளி விட்டு மழை பெய்யக்கூடும். அது நாம் அலுவலகம் செல்லும் பகல்நேரத்தில் கூட இருக்கலாம்.

rain

மேகக்கூட்டங்கள் சென்னைக்கு அருகே எப்படி உருவாகிறது என்று இன்று மாலை அல்லது இரவுதான் தெரியும். எப்படி நகர்கிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம். மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று இப்போதே கூறவில்லை.

சென்னை மீது மேகக்கூட்டங்கள் சரியாகப் பரவி, காற்றும் அதற்கு ஏற்றார்போல் வீசினால், நமக்கு இன்று மாலை அல்லது இரவு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு. அதேசமயம், வடதிசை நோக்கி காற்று திரும்பும் பட்சத்தில் கனமழையை நாம் இழக்கக்கூடும், லேசான மழை மட்டுமே கிடைக்கும். ஆதலால், மேகங்கள் எப்படி கூடுகின்றன என்று பார்க்க மாலைவரை காத்திருப்போம். இவ்வாறு பிரதீப் ஜான்  பதிவிட்டுள்ளார்.

ஆகவே மேகம் காற்றின் வேகத்தில் திரும்புவதை ஓட்டி மழைக்கு வாய்ப்பு உ

Leave a Response