நாளையாவது தீர்ப்பு வருமா- இரட்டை இலை!

ila

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி,‘ தண்டணை பெற்றவர் எம்எல்ஏ பதவியை இழக்கலாம். அதற்காக கட்சிப்பதவியை இழக்க வேண்டியதில்லை. சசிகலாதான் பொதுச்செயலாளராக நீடிக்கிறார். அவரால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமியுடன் இணைந்து சசிகலாவை நீக்கியது அதிமுக சட்டவிதிகளுக்கு முரணானது. முதலில் சசிகலாவுக்கு ஆதரவாக பிரமாண பத்திரங்கள் கொடுத்தவர்கள், தற்போது மாறியுள்ளனர். இதில், சில தவறுகள் நடந்துள்ளன.

jaya2

இது தொடர்பாக குறுக்கு விசாரணை நடத்த வேண்டும்’ என்று வாதிட்டார். அபிஷேக் சிங்வி சுமார் 2 மணி 20 நிமிடங்கள் வாதிட்ட நிலையில், மற்றொரு வழக்கறிஞரான தாக்கூரும் தினகரனுக்கு ஆதரவாக வாதிட்டார். மாலை 6 மணியாகிவிட்டதால், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

Leave a Response