பாஜக போடும் திட்டத்திற்கு திமுக அடிபணியுமா!

modi-stalin455

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை கபளீகரம் செய்து கொண்டது பாஜக. டெல்லியில் கட்டுப்பாட்டில் ஒட்டுமொத்த தமிழக அரசே சிக்கிக் கொண்டது.

டெல்லி என்ன நினைக்கிறதோ அதையே தமிழக ஆட்சியாளர்களும் செயல்படுத்துகின்றனர். இதனால் பாஜகவின் மறைமுக ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது என்பது அனைத்து கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டு.
ஆனால் தமிழக பாஜக தலைவர்களோ தமிழக அரசை கடுமையாகவே விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியால் மக்களின் குரலைப் போல பாஜக தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

dmk modi-stalin

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் திமுக வெல்லும் என்கிற நம்பிக்கையில் அக்கட்சி இருக்கிறது. இதனால் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் திமுகவை நோக்கி நகருகின்றன.

இந்த நிலையில் திடீரென திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தார். இச்சந்திப்புக்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், பிரதமர் மோடியின் வருகையால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என கூறியிருந்தார்.

dmk1

அத்துடன் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு மோடி வருவதற்கு முன்பே முதல் ஆளாக தனிநபராக போய் வாசலில் நின்று கொண்டார் தமிழிசை சவுந்தரராஜன். அத்துடன் கணிசமாக பாஜக தொண்டர்களையும் கருணாநிதி வீட்டு முன்பாக திரள வைத்து பாரத் மாதாகீ ஜே என கோஷம் போட வைத்தார் தமிழிசை.

இதன் அடுத்த கட்டமாக திமுக தலைமையின் தலைக்கு மேலே தொங்கும் கத்திகளைக் காட்டி அக்கட்சி மீது சவாரி செய்து பார்க்கவே பாஜக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதைத்தான் பிரதமர் மோடியின் கருணாநிதியுடனான சந்திப்பு, தமிழிசையின் பேட்டிகள் மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் அப்படி பாஜக பக்கம் சாய்ந்தால், அது தனக்கு தானே திமுக தோண்டிக் கொள்ளும் சவக்குழியாகவே இருக்கும். நிச்சயம் தமிழக மக்கள் பாஜக- திமுக அணியை ஏற்கவேமாட்டார்கள் என்கின்றனர் திமுகவில் இன்னமும் கொள்கைப் பிடிப்புள்ள மூத்த நிர்வாகிகள்.

dmk2

Leave a Response