‘தினத்தந்தி’ நாளிதழின் பவள விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இதனால் திடீரென சென்னை மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் போலீசுடன் ஆங்காங்கே வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.