மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வாரா ரஜினிகாந்த்..?

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் பிரதமர் மோடி தன்னுடைய பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில் அவர் வருகின்ற ஜூன் 8-ம் தேதி 3-வது முறையாக மீண்டும் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இமயமலைக்கு சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது டெல்லிக்கு விரைந்துள்ளார்.

அவர் டெல்லி பயணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் 40 தொகுதிகளையும் வென்ற திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதோடு சந்திரபாபு நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் அதைத் தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வீர்களா என்று கேட்டார்கள். ஆனால் அதற்கு அவர் எந்தவித பதிலும் சொல்லவில்லை. இருப்பினும் அவர் இமயமலை பயணத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு கிளம்பியதால் மோடியின் பதவி ஏற்பு விழாவில் தான், அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response