மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி, சந்திரபாபு, பவண்கல்யானுக்கு டேக் செய்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். சர்மிளா தனது எக்ஸ் பக்கத்தில் மாநில மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். புதிய அரசை அமைக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
மக்களின் எதிர்பார்ப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு, மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். சிறப்பு அந்தஸ்து பெற வேண்டும். போலவரம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். தலைநகர் கட்டுமானம் செய்யப்பட வேண்டும். வேலையில்லாத இளைஞர்களுக்கு பெரிய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
மாநில நலமும் வளர்ச்சியும் சமமாக இருக்க வேண்டும். மக்கள் கொடுத்த இவ்வளவு பெரிய பெரும்பான்மையுடன் எப்படி ஒரு அடி எடுத்து வைப்பது என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். மாநிலத்தின் எதிர்காலம் குறித்து சிந்தித்து, சிறப்பு அந்தஸ்தை வழங்க கட்டுப்பட்டுள்ள காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவளிக்க கோருகிறோம். மக்கள் சார்பாக போராடி மக்களின் குரலாக மாறியுள்ள காங்கிரஸ் கட்சி, மாநில மக்களுக்கு தொடர்ந்து துணை நிற்கும். அரசின் லட்சியங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம் என சந்திரபாபு, பவண்கல்யாண் டாக் செய்து பதிவு செய்துள்ளார்.