
காவல் பணியுடன் மீட்பு, நிவாரணப் பணியில் காவல்துறையினர் ஈடுபடுவதற்கு கமல் நன்றி தெரிவித்தார். நல்ல குடிமகன் சீருடை அணிந்தாலும் அணியாவிட்டாலும் பிரகாசிப்பர் என்று கூறிய கமல், காவலர்களை போல் தங்களது கடமையாற்ற தமிழர்களுக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


