வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!!

yaanai
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகவே யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலாத் தலங்களிலும் யானைகள் நடமாடியதால் அக்டோபர் 27-ஆம் தேதி முதல் வால்பாறைப் பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில், எஸ்டேட் பகுதியை விட்டு யானைகள் வனத்துக்குள் சென்றுவிட்டதால், நல்லமுடி எஸ்டேட் காட்சி முனை, நீராறு அணை உள்ளிட்ட யானைகள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் புதன்கிழமை முதல் அனுமதியளித்துள்ளனர்.

Leave a Response