தலைமை செயாளர் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதி

girija

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் முதலான இடங்களில்,  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து தலைமைச ்செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் தேர்வு செய்யப்பட்டார்.

Puducherry1StG9611LPBM3jpg

அதன் பின்னர் நடந்த பல அரசியல் நிகழ்வுகளிலும் எவ்வித சர்ச்சையிலும் சிக்காத அதிகாரியாக தலைமைச் செயலாளர் பொறுப்பில் கிரிஜா வைத்தியநாதன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக கணுக்காலில் வலி காரணமாக கிரிஜா வைத்தியநாதன் அவதிப்பட்டு வந்தார். நேற்று ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு அவருக்கு கணுக்காலில் சிறிய எலும்பு முறிவு இருப்பதாக அறியப்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டது.

பின்னர் வீடு திரும்பிய அவர் வலி அதிகமாகவே நேற்று மாலை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விபரம் தெரியவரும்.

Leave a Response