அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது விசாரணை கமிஷன்- ஜெர்க்கான தலைவர்!

 

apollo hosp main

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி நள்ளிரவில் அப்பல்லோ மருத்துவமனைக்குள் கொண்டு செல்லப்பட்ட ஜெயலலிதா, அதன் பிறகு டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவில் உயிரற்ற உடலாகத் தான் திரும்ப ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டார். இந்த இடைப்பட்ட 72 நாட்களில் ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது யாருமே அறிந்திடாத விஷயம்.

ஜெயலலிதா அருகில் இருந்து சசிகலா பார்த்துக் கொள்கிறார் என்று சொல்லப்பட்டது, ஆனால் அண்மையில் டிடிவி. தினகரன் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு சசிகலாவையே ஜெயலலிதா பக்கத்தில் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்றனர். எனினும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவருடைய உடல்நலன் குறித்து அவ்வபோது அறிக்கைகளாக மட்டுமே தந்து வந்தது அப்பல்லோ நிர்வாகம்.

pratapreddy-apollo.jpg.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது எனினும் ஒரு வார காலம் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்பது தான் அப்பல்லோவின் முதல் அறிக்கை. ஆனால் அந்த அறிக்கையைத் தான் தற்போது இல்லை என்று மறுத்துள்ளார் அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டி.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் ரெட்டி:-

ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து வரும் போதே ஆபத்தான நிலையில் தான் இருந்தார். அவருக்கு காய்ச்சல் என்று ஏன் அறிக்கை தரப்பட்டது என்றால் மக்கள் அச்சப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அப்படி அறிக்கை தரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

pratapreddy-apollo3

ஆனால் பிரதாப் ரெட்டியின் இந்த வாதத்தை எந்த வகையில் எடுத்துக் கொள்வது என்பது தான் புரியாத புதிராக உள்ளது. மக்கள் தலைவர் ஒருவருக்கு என்ன உடல்நலப் பிரச்னை என்பதில் ஏன் இந்த ஒளிவுமறைவு என்பது தான் அனைவர் மத்தியிலும் எழும் கேள்வி. அப்படியானால் ஜெயலலிதா ஒரு வாரத்தில் வீடு திரும்பி விடுவார், அவரே விரும்பி தான் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் எப்போது விருப்பப்படுகிறாரோ அப்போது வீடு திரும்பலாம் என்று அடுத்தடுத்து பிரதாப் ரெட்டி சொன்னதில் எது உண்மை என்ற சந்தேகமும் எழுகிறது.

-pratapreddy-apollohospital-managingdirector

இது ஒருபுறமென்றால் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது தான் மக்கள் அச்சப்படுவார்கள் என்று காய்ச்சல் என்று அறிவித்ததாக சொல்லும் பிரதாப் ரெட்டி, அவர் உயிரிழந்த ஓராண்டு வரை இதை சொல்லாதது ஏன்? தற்போது விசாரணைக் கமிஷன் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் பிரதாப் ரெட்டி ஜெயலலிதா ஆபத்தான நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஒரு நபர் நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிஷனின் விசாரணைக்கே ஒவ்வொரு உண்மைகளாக வெளிவரும் நிலையில், அரசியல் கட்சிகளும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கும் போது கேட்டுக் கொண்டது போல ஜெ. மரணம் குறித்து ஒரு வேளை சிபிஐ விசாரணை நடத்தினால் முழு உண்மையும் தெரிய வருமோ என்னவோ.

Leave a Response