ஜெயலலிதா மரணம்; சிபிஐ-ஆல் மட்டுமே தீர்வு கிடைக்கும்..! ஸ்டாலின் அதிரடி..!

stalin1

ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தால் எந்த பலனும் இல்லை எனவும் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும் வலியுறுத்தியுள்ளனர்.

jayalalithaa-dead body

ஜெயலலிதாவின் மரணத்தில் நீடிக்கும் மர்மங்கள் இதுவரை வெளிவரவில்லை.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.

அணிகள் இணைப்புக்கு முன்பு பன்னீர்செல்வம் அணியும் நீதிவிசாரணை கோரியது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அமைச்சர்கள் அவரை பார்த்தது, ஜெயலலிதா சாப்பிட்டது ஆகியவை தொடர்பாக அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவித்ததால் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது.

இதையடுத்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

cbi

இந்த விசாரணை கமிஷனால் ஜெயலலிதாவின் மரணம் குறித்த எந்த மர்மமும் வெளிவரப்போவதில்லை எனவும் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்  எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள், ஆளுநர், முதலமைச்சர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், லண்டன் மருத்துவர் பீலே, சிங்கப்பூர் மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் என அனைவரையுமே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதே கருத்தை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும் வலியுறூத்தியுள்ளார்.

Leave a Response