வாட்ஸ்அப் & ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்குமா உயர் நீதிமன்றம்?

 

images

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வி.டி.மூர்த்தி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், ’வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்ஆகிய நிறுவனங்கள், இணையம்மூலம் அளிக்கும் போன் வசதிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.

நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை அளித்துவரும் மற்ற நிறுவனங்களைப் போலவே, மேற்கூறிய இரண்டு நிறுவனங்களின் இணைய வழி செல்போன் சேவையையும் ஒழுங்குபடுத்த வேண்டும்.

அதுவரை, வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை செயல்படத் தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒழுங்குபடுத்தப்படாமல் இணையம்மூலம் வாய்ஸ் கால் சேவை அளித்துவருவது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.

அந்த நிறுவனங்கள் அளித்துவரும் வாய்ஸ் கால் சேவையின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் என்கிரிப்ஷன் குறியீடுகள், எளிதில் ஹேக் செய்ய முடியாதவை.

இந்த வசதியைப் பயன்படுத்தி, தீவிரவாதிகள் எளிதில் தங்களுக்குள் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்கிறார்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Response