அதிமுக உடைந்த போது ஓபிஎஸ் அணியில் இருந்தார் மைத்ரேயன். டெல்லியின் ஆசியுடன் மத்திய அமைச்சராகலாம் என்பது மைத்ரேயனின் கனவாக இருந்தது.
ஆனால் அதிமுக அணிகள் இணைப்புடன் மட்டுமே நிறுத்திக் கொண்டது. இதனால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் ஓபிஎஸ் அணி எம்.பி.க்கள் இருந்து வருகின்றனர்.
இதனிடையே அதிமுக அணிகள் இணைந்த பின்னரும் இருதரப்பும் இணக்கமாக இல்லை என்றே கூறப்பட்டது. கேபி முனுசாமி, மைத்ரேயன் போன்றவர்கள் அதிருப்தியுடன் இருப்பதாகவே தகவல்கல் வெளியாகி இருந்தன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக இணைப்பு தொடர்பான அதிருப்தியை அவ்வப்போது ஃபேஸ்புக்கில் மைத்ரேயன் வெளியிட்டு வந்தார். இன்றும் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்? என ஆதங்கத்துடன் ஒரு பதிவை போட்டிருக்கிறார் மைத்ரேயன்.