சீனாவின் பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது- பிரதமர் பங்கேற்பு!

modi sinaa

பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாடு சீனாவின் ஜியாமென் நகரில் தொடங்கியுள்ளது. உறுப்பு நாடுகளின் தலைவர்களை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பு பிரிக்ஸ் என அழைக்கப்படுகிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜியாமென் நகரில் உள்ள தங்கும் விடுதிக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக மாநாடு நடைபெறும் அரங்கிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநாடு அரங்கில் பிரதமர்மோடியை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். பிரிக்ஸ் தலைவர்கள் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த மாநாட்டின்போது, தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response