பிரேசில் நாட்டில் ஒரே நாளில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 1,437 பேர் பலியாகியிருப்பது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த சில தினங்களாகப் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக நாள் ஒன்றுக்கு உயிரிழப்பு ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் உள்ளது
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,437 பேர் பலியானதை அடுத்து மொத்த உயிரிழப்பு 34,021 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், லத்தீன் அமெரிக்க நாட்டில் வியாழக்கிழமை 30,925 பேருக்குப் புதிதாக நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதுவரை மொத்த பாதிப்பு 6,14,941 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை விடப் பிரேசிலில் நாளொன்றுக்குப் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பலி எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது பிரசில்.