இந்தியாவில் கொரோனாவால் நேற்று வரை 2,16,919 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த பாதிப்பு 2,26,770 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 273 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,348 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலின் மிக முக்கிய இடமாக சென்னை மாறியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான நபர்கள் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் நோயாளிகளின் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
நேற்று மட்டும் சிறுமி, இளம்பெண் உட்பட 12 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று சென்னை மின்ட் பகுதியில் உள்ள கொண்டிதோப்பில், ஒரே வீட்டில் வசித்த வந்த வசித்து வந்த 10 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நேற்றும் சென்னையில் 1072 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.