உலக அளவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா..!

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,815 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 65,68,510-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, நோய்த்தொற்றுக்கு 1,169 போ பலியானதைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய் பாதிப்பால் பலியானவா்களின் எண்ணிக்கை 3,87,957-ஆக உயா்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 31,69,243 லட்சத்தை கடந்துள்ளது.

தொற்று பாதித்தோர் 29,57,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 54,200-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பாதிப்பு எண்ணிக்கையைப் பொருத்தவரை சா்வதேச அளவில் அமெரிக்காவில் 19,01,783 பேரும், பிரேசில் 584,562 பேரும் ரஷியாவில் 432,277 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,16,919 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9304 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 260 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Response